Thursday, January 19, 2012

பெண்பார்க்கும் படலம் !!!

நாடறிந்த ஒரு IT
கம்பெனியில் Project Leader
ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது. நாளை
பெண்பார்க்கும் படலம்.
நல்ல குடும்பம்,
அழகான,
அறிவான வரன் ...என்னை தான் சொல்கிறேன்!!!!. யாருக்கு தான் என்னை பிடிக்காது.



பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.


பார்க்கவிருக்கும் பெண்ணின் போட்டோ கூட தரவில்லை.
கேட்டதற்கு,
"நாங்க Orthodox
family" என பதில் வந்தது. "Orthodox Family"
ல இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட் விழாதான்னு நீங்க அதஇத கேட்டு என்னோட
கல்யாணத்த றுத்திடாதீங்க ப்ளீஸ்.




இது தான் முதல் முறை.
எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.
அம்மா அப்பா எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும்.
அப்பொழுது மொத்த குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும் .


நாளை என்ன நடக்கும்...


ஏன்டா பொண்ணைத்தான பாக்குற?
ஏதோ Zoo
ல காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே...கொஞ்சம் Romance
ஆ பாருடா என தாய்மாமா சொல்வாரோ?




பல சிந்தனைகள்,
பயங்கள்,
நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது.
என்னுடைய நெருங்கிய நண்பன் Prakash(NV) உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக
இருக்கும்.


பிரகாஷ் என்னுடைய பால்ய சிநேகிதன்.
மிக நல்லவன்,
வெகுளி.
எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான்.
நாளை இவனும் இருந்தால்,
ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.
எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும்.
நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம்.


பிரகாஷ் விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன்.



நானே சொல்லனும்னு நெனச்சேன்.
கண்டிப்பா வரசொல்லு என்றார்.



மறுநாள் காலை...9:05 மணி.
இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம்.
வழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை.
அழகாக இருப்பாளா,
எந்த சினிமா நடிகை மாதிரி இருப்பாள்?
கண்கள் எப்படி இருக்கும் ?
புதிய அனுபவமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது!!. பெண் வீட்டை
அடைந்துவிட்டோம்.



வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது.
அது எங்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது.
காலிங் பெல்லை அழுத்தினார் அப்பா.



உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள்.
வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா?
வாங்க உள்ள வாங்க என்றார்கள்.



உள்ளே நுழைந்தோம்.
ஹாலில் ஒரு போட்டோவை Frame
செய்து மாட்டி வைத்து இருந்தார்கள்.
அதில் ஒரு பெண்ணும்,
வெளியில் கட்டி போட்டு இருக்கும் நாயும் இருந்தார்கள்.
அப்பா சொன்ன அடையாளம் எல்லாம் வச்சி பார்த்தா,
இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும். அடடா என்ன அழகு..
நான் என் மனதை பறிகொடுத்தேன்.
உடனே என் மனதில் டூயட்.
"ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்". பாடி
முடிக்கவில்லை...அதற்குள் பிரகாஷ் யெடுத்தான்.

அந்த போட்டோ ல இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல?
என்றான்.

டேய் அதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா.
சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse
ஆயிட்டேன்.

என்னடா பதில் இது.
டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத.

இந்த நேரத்தில்,
ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார்.
hai, How is Your job? என்றார்.

நல்லா இருக்கு.
ஆமா நீங்க யாரு?
என்றேன்.

நான் பொண்ணோட சித்தி,
US ல இருக்கேன்.
நடராஜ் நாளைக்கி வருவார்.

நடராஜ் உங்க பையனா?

No No, He is my
Husband .


கூட காமராஜ் ம் வருவார்.


உங்களுக்கு மொத்தம் எத்தன Husband
என கேட்டான் பிரகாஷ்!!!!.

you rubbish,
காமராஜ் என்னோட Son.

சாரி ஆன்ட்டி,
பேர் rhyming
ஆ இருந்ததால கேட்டேன்.

ஆன்ட்டி என்னிடம்,
Is there any Onsite opportunity?

நமக்கு எங்க அதெல்லாம்... நான் Offshore
ல இருக்க figure
அ தான் இன்னும் site
அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு....No Onsite, Only Offshore
Site
Opportunity என இல்லாத புது வார்த்தையை சொன்னேன்.

Oh That is also very
good na!!?!!?!!? என்றார்.

நடராஜ் Con-Call
ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி english
ல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.

நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா.

பெண் தயாராகிவிட்டாள்.
இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார்.
பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு இருப்பது அப்பாவின்
முகபாவனைகளில் ரிந்தது.

வாம்மா ரொம்ப சாது,
ஒன்னும் பண்ணாது என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
இவர் யாரை சொல்கிறார்.

அட வாம்மா,
கடிக்காதுனு சொல்றேன் ல?.

என்னை தான் சொல்லி இருக்கிறார்.
நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.

ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள்.
போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள்.
அடப்பாவிங்களா போட்டோவ Zoom-In
பண்ணி பிரிண்ட் போட்டீங்களா?

பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா என்றான் பிரகாஷ்
பெண்ணின் கப்பனாரைப்பார்த்து.

டேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா என்றேன்.
ஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள்.
எனக்கு பிடித்துதானிருந்தது.

பெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள்.
பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார்.

இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி ஆனா இதுல ஒரு விஷயத்த நான்
சொல்லணும்.
பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்.
அத கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றார்.

உடனே பிரகாஷ்,
ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை?

அதுக்கு இல்லை,
பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா,
மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது என்றார் .


அய்யய்யோ என தோன்றியது எனக்கு.
ஆனால் பிரகாஷ் அசராமல் சொன்னான்.

அதுக்கென்ன Sir,
இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய முடிச்சிவிட்டுடறோம்.

நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம்.
அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம்.

என்னம்மா நான் சொல்றது என என்னுடைய அம்மாவையே கேட்டான்.


எங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.

Sir,
அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
மனசு ஒத்து போச்சினா கல்யாணத்த முடிச்சிடலாம் என்றார் என்னுடைய அப்பா.


ரொம்ப சந்தோஷம்,
அப்போ பையனோட கடைசீ ஆறு மாச Salary Slip
அப்புறம் ஆறு மாச Bank Statement
குடுத்துவிடுங்க என்றார் பெண்ணின் பாட்டி!.


உடனே பிரகாஷ்,
பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம்.
Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல என்றான்.


பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார்.
இல்லை இல்லை,
அவுங்க சரியா தான் கேக்குறாங்க அவுங்க கேட்ட documents
அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ Balance Sheet,
பேங்க் statement,
auditor யாரு,
உங்க கம்பெனி முதலாளி யாரு,
இப்போ எங்க இருக்கார்.
எல்லா detail
ம் குடுத்து அனுப்புங்க என்றார்.


அதற்கு பிரகாஷ், நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.
குடுக்குறது பத்தி இல்லை சார்,
இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail
ம் விசாரிச்சிட்டு,
இவனைவிட அவரு better
ஆ இருக்காருன்னு

நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம் என்றான்.


பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா என்றார் பெண்ணின் தகப்பனார்.

அட நீங்க வேற சார்,
எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு முன்னாடி,
லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி குடுத்தாரு. ஆனா
பாருங்க கல்யாணத்துக்கு ப்புறம் தான் தெரிஞ்சது...மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு
கல்யாணம் ஆன சேதி.
அதனால எது தேவையோ அத கேளுங்க சார்.
டேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா என்றான் என்னைப்பார்த்து.


டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்றேன்.


அப்போ நாங்க புறப்படறோம் என்றார் என்னுடைய அப்பா.

ரொம்ப சந்தோஷம்.
ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம்.
இது பெண்ணின் தகப்பனார்.


ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார்,
பேர் வச்சிட்டு கிளம்பறேன் என்றான் பிரகாஷ்.


குழந்தை எதுவும் இல்லை.
அடுத்த வாரம் தான் எங்க நாய்,
குட்டி போட போகுது.
போட்ட உடனே சொல்லி அனுப்பறோம் என்றார் அந்த US
ஆன்ட்டி.


அப்படியா,
என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா?
. இது பிரகாஷ்.


இல்லை.
இது ஆன்ட்டி.


pregnant
ஆன ஆறு மாசத்துல!?
என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும் என்றான்.


எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது.
டேய் பிரகாஷ் கிளம்புடா என்றேன்.



வீடு திரும்பும்போது அம்மா,
அப்பாவை பார்த்து கேட்டார்,
ஏங்க,
வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க.
இங்க என்ன பொண்ணோட அப்பா சொல்றாரு?


எனக்கும் அது தான் யோசனையா இருக்கு.
பார்க்கலாம் விதின்னு ஒன்னு இருக்குல்ல என்றார் அப்பா.



ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை.
நாங்களே தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில்
விருப்பம் இல்லையாம்.


அவர்கள் சொன்ன காரணம் :
"பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!".


அடப்பாவி பிரகாஷ்,
இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!..


விரக்தியோடு அடுத்த வரனுக்காக காத்திருக்கிறேன்!!



பி.கு. :
உங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு
சொல்லுங்க. கண்டிப்பா பிரகாஷ் கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம்!!

Tuesday, August 23, 2011

Hero Motocorp Tamil Theme song Lyrics!

Oh..Manam mella mella thudikuthe..

Puthu maatram nenjil pirakuthe..

Payanangal povom uchcham uchchamthaan..

Thunive kaikorkka vaa .. Thooraththai thoorkka vaa..

Vetrikkul neenthidum naalthaan..

Kanavugal nisamaaga.. Kaalam nam vasamaaga..

Thisaigalthaan....... nam viral theendume..

Kadalgalthaan........ nam kural thaandume..

Ulagaththin kangal nammeethile..

Namai nambiththaan ulagamthaano..

Nammulle hero... naamthane hero..

Nammulle hero... naamandri yaaro.. naamandri yaaro..

Kandeduththom... naam.. Nammulle hero...

Kaikottiththaan... Sol... naamthaane hero..

Nammulle hero... naamthane hero....!

Thursday, May 19, 2011

Tamil Films sweeps 2010 National Awards

Tamil Films sweeps 2010 National Awards:

BEST DIRECTION
Vetrimaran, Aadukalam (Tamil)

BEST ACTOR
Dhanush, Aadukalam (Tamil)

BEST ACTRESS
Saranya Ponvannan, Thenmerkku Paruvakkatru (Tamil)

BEST SUPPORTING ACTOR
J. Thambi Ramaiah, Mynaa (Tamil)

BEST SUPPORTING ACTRESS
Sukumari, Namma Gramam (Tamil)

BEST SCREENPLAY
Original: Vetrimaran, Aadukalam (Tamil)

BEST EDITING
T.E. Kishore, Aadukalam (Tamil)

BEST PRODUCTION DESIGN
Sabu Cyril, Endhiran (Tamil)

BEST COSTUME DESIGNER
Indrans Jayan, Namma Gramam (Tamil)

BEST LYRICS
Vairamuthu, Thenmerkku Paruvakkatru (Tamil)

BEST SPECIAL EFFECTS
V. Srinivas M Mohan, Enthiran (Tamil)

BEST CHOREOGRAPHY
Dinesh Kumar, Aadukalam (Tamil)

BEST TAMIL FILM
Thenmerkku Paruvakkatru
Producer: Shibu Isaac
Director : Seenu Ramasamy


SPECIAL MENTION
Aadukalam (Tamil)

Thursday, May 20, 2010

பேய் மைக்கல் ஜாக்சன் !




Dont see the video without sound!

Dont see the video without sound!

Dont see the video without sound!

Wednesday, March 31, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல் --ஒரு விளக்கம்……

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!