Saturday, December 12, 2009

தூறல் ....





























நட்பு ........




கடலை - சிறு குறிப்பு வரைக.....






கல்லூரி ஞாபகங்கள்

கல்லூரி ஞாபகங்கள் ...:
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும்
மறக்கமுடியாத நாட்கள் சில
எங்களை பொறுத்தவரை- அது
ஆகஸ்ட் 5, 2002.
காலையும் மாலையும்
பேருந்து பயணம்
கையிலே ஒரு புத்தகம்
பையிலே ஒரு பேனா,
கொஞ்சம் பயம்
நிறைய கற்பணை,
புதிதான வகுப்பறைகள்
புரியாத பாடங்கள்,
இப்படிதான் துவங்கியது
எங்களின்
“கல்லூரி வாழ்க்கை”!
நாங்கள் ஒருவருக்கொருவர்
அறிமுகம் ஆவதற்கே
ஆறு மாதங்கள்
கடந்து விட்டது,
பிறகுதான் நாங்கள்
தெரிந்து கொண்டோம்
எங்களின் இறுதிநாட்கள்
எண்ணப்பட்டன என்று!
ஒன்றுமட்டும் எங்களுக்கு
புரியவே இல்லை,
நான்கு வருடங்களாக-நாங்கள்
எங்கே இருந்தோம் ?
சிறியவர்களாய் சென்ற
எங்களுக்கு சிந்திக்க
கற்று கொடுத்தது
அந்த கல்லூரி,
முடித்துவிட்டு வெளியே வந்த
எங்களுக்கு முகவரி கொடுத்தது
அந்த கல்லூரி,
நான்கு வருடங்கள்
முடிந்ததும் நாங்களும்
காய்ந்த சருகுகள்
ஆகி விட்டோமோ
இரக்கமில்லாமல் எங்களையும்
உதிர்த்துவிட்டதே!
நாங்கள் வகுப்பறையில்
படித்த நேரத்தைவிட
மற்றவர்களோடு பேசிய
நேரம்தான் அதிகம்,
எங்களுக்கு பொழுது
போகவில்லை என்றால் -நாங்கள்
புரட்டி பார்த்தது
புத்தகங்களை மட்டும்தான்!
இப்பொழுதும்கூட எங்களின்
கண்கள் கலங்கி விடுகிறது,
காரணம் என்னவென்றால்
“எங்களுக்கு மறுபடியும் கிடைக்காத சில விஷயங்கள் “
தேர்வு நாட்களில் மட்டும்
தேடி செல்லும் -அந்த
பிள்ளையார் கோவில்!
மாணவர்களாய் சென்ற எங்களை
உறவினறாய் மாற்றிய
கல்லூரி விடுதி!
குறைந்த நாட்கள் மட்டும்
சுதந்திரமாய் திரிந்த
கல்வி சுற்றுலா!
விடியும்வரை அரட்டைகள் அடித்த
விடுதி அறைகள்!
யாருக்கும் தெரியாமல்
கண்களால் பேசிய
உண்மை காதலர்கள்!
தினந்தோறும் ஒன்றாக
சாப்பிட்ட மதிய உணவு!
ஆசையாய் இருந்தாலும்
அடிக்கடி போகாத
கல்லூரி நூலகம்!
நாங்கள் கடந்துவந்த
பாதைகள்தான் வேறு தவிர
காலங்கள் ஒன்றுதான்!
“பிரிவின் வலி,இதுதான்”
என்று தெருந்திருந்தால்
நாங்கள் நண்பர்களாக
பழகியிருக்கவே மாட்டோம்
மொத்தத்தில், நாங்கள் பிரிந்துவந்தது
எங்கள் கல்லூரியை விட்டுதானே-தவிர
அந்த கல்லூரி நினைவுகளை விட்டு அல்ல